இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் தணிந்தது

இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் தணிந்தது

2 mins read
2e845467-222e-494f-a622-d7748e12ff5b
-

புதுடெல்லி: இந்திய-சீனா எல்லையில் கடந்த இரண்டு மாதங்களாக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே நீடித்த மோதல் தற் போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்தியப் பிரத மர் நரேந்திர மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பங்கேற்பார் என்று இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஸியாமென் நகரில் செப்டம்பர் 3 முதல் 5 வரையில் பிரிக்ஸ் மாநாடு நடை பெறுகிறது. இதில் பங்கேற்க வரு மாறு பிரதமர் மோடிக்கு சீன அதி பர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று பிரதமர் மோடியின் சீனப் பயணம் அமைகிறது. சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, மியன்மார் செல் கிறார்.

மியன்மாரில் அந்நாட்டின் அதிபரைச் சந்திக்கும் திரு மோடி, செப்டம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மியன்மார் அரசாங்க ஆலோ சகரான ஆங் சான் சூச்சியையும் அவர் சந்திக்கிறார். இந்தியா-சீனா-பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் சிக்கிம் எல்லையையொட்டி உள்ள டோக்லாம் பகுதியில் இந்தியாவுக் கும் சீனாவுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து வரு கின்றனர் என்று குற்றம்சாட்டிய சீனா, அங்கிருந்து இந்திய ராணு வம் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதற்கிடையே தூதர் நிலையில் அண்மையில் இரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது தத்தம் படைகளை விலக்கிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. இதனால் டோக்லாம் பகுதியில் தற்போது அமைதி நிலவுகிறது.