மருத்துவர்கள் மோதல்; குழந்தை மரணம்

மருத்துவர்கள் மோதல்; குழந்தை மரணம்

1 mins read

ஜெய்ப்பூர்: அறுவை சிகிச்சை அறையில் மேசை மீது கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த இரு மருத்துவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள உமைத் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சம்ப வத்தை ஊழியர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இது சமூக ஊடகங்களில் பரவியதால் பலர் அதிர்ச்சியடைந் துள்ளனர். தாய், சேய் நல மருத்துவப் பிரிவின் உதவிப் பேராசிரியரான டாக்டர் அஷோக் நயின்வால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை அளிப்பதைக் காணொளி காட்டியது. அப்போது மயக்க மருந்து நிபுணரான டாக்டர் மாதுரா லால் தாக் என்பவருக்கும் அவருக்கும் இடையே சிகிச்சை அளிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குழந்தையின் இதயத் துடிப்பு குறைவாக இருந்ததால் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் இருவரும் மோதலில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஒரு வரை ஒருவர் வாய்க்கு வந்தபடி சரமாரியாகத் திட்டிக்கொண் டனர்.

அறுவை சிகிச்சை அறையில் இரு மருத்துவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. படம்: காணொளி

https://www.youtube.com/watch?v=L7KK3k2X_i0