தமிழிசை: சினிமாவில் கோட்டை விட்டால் வேறு வழி இல்லை

தமிழிசை: சினிமாவில் கோட்டை விட்டால் வேறு வழி இல்லை

1 mins read
56c5e6ec-e146-4b80-b7e1-ffefa369564e
-

சென்னை: அரசியல் குறித்துப் பேசும் நடிகர் கமல்ஹாசன் மனக்கோட்டை கட்டி வருவதாக தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கமல்ஹாசன் சினிமாவில் கோட்டை விட்டுவிட்டார் என்றும் அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தேவைப்பட்டால் கோட்டையை நோக்கி புறப்படுவோம் என திருமண நிகழ்வில் கமல்ஹாசன் பேசியதற்கு பதிலளித்துள்ளார் தமிழிசை. "சினிமாவைக் கோட்டை விட்டபின் வேறு என்ன? கோட்டையை நோக்கித்தான் வர வேண்டும். "கமல்ஹாசன் கோட்டை குறித்து மனக்கோட்டை கட்டி வருகிறார்," என்று தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் தமிழிசை. எனினும் கமல் பேச்சு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது