துரோகம் செய்தது யாராக இருந்தாலும் விடப் போவது இல்லை - டிடிவி தினகரன்

துரோகம் செய்தது யாராக இருந்தாலும் விடப் போவது இல்லை - டிடிவி தினகரன்

1 mins read
00d3d755-5d1d-457f-9de7-382781701ebc
-

சென்னை: துரோகம் செய்தவர் கள் யாராக இருந்தாலும் அவர் களை விடப் போவதில்லை என அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். துரோகச் சிந்தனை இல்லாத மனிதரை முதல்வராக்க வேண் டும் என்பதுதான் தங்களது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கு சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், தமிழக முதல் வரும் அமைச்சர்களும் தவறான தகவல்களை மத்திய அரசுக்கு அளித்து வருவதாகச் சாடினார். "முதல்வரும் அமைச்சர்க ளும் மோசடியாகச் செயல்படு கின்றனர். அதிமுக எம்எல்ஏக் களை அடைத்து வைத்திருப்ப தாகக் கூறுகின்றனர். "அன்றைக்கு பன்னீர்செல் வம், 'எனக்கு ஆதரவாக 86 பேர் இருக்கின்றனர்; அவர் களை அடைத்து வைத்திருக் கின்றனர்; திறந்துவிட்டால் வந்து விடுவர்' என்றார். ஆறேழு மாதங்கள் கழித்தும், அவரிடம் இருந்து தான் ஒரு எம்எல்ஏ எங்கள் பக்கம் வந்தாரே தவிர, இங்கிருந்து யாரும் அவர் பக்கம் செல்ல வில்லை," என்றார் தினகரன்.

அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்