சென்னை: சுமார் 2.7 கிலோ தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செவ்வாய்க்கிழமை இரவு துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த, கேரளாவைச் சேர்ந்த அப்துல் நியாஸ் என்ற இளையரின் பையை சோதனையிட்ட போது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற திரவங்கள் கொண்ட புட்டிகள் வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்தத் திரவங்களை ஆய்வு செய்தபோது, தங்கத்தை உருக்கி, திரவமாக மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் மற்றொரு விமானத்தில் வந்த அக்பர் என்ற பயணி 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. ஒரே நாளில் மொத்தம் 2.7 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
தங்கத்தை திரவமாக மாற்றி விமானத்தில் கடத்தி வந்த இளையர் சிக்கினார்
1 mins read

