மீண்டும் சலுகைகள்: உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் முருகன்

மீண்டும் சலுகைகள்: உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் முருகன்

1 mins read

சென்னை: ஜீவசமாதி அடையும் நோக்கத்துடன் வேலூர் மத்திய சிறையில் 12 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த முருகன், தன் போராட்டத்தை கைவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் ரத்து செய்யப்பட்ட சலுகைகள் அனைத்தும் மீண்டும் வழங்கப்படும் என சிறை அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாகத் தெரிகிறது. கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதத்துடன் மவுன விரதமும் இருந்து வந்தார் முருகன். இதைக் கேள்விப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இந்நிலையில் அதிகாரிகள் முருகனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் தனக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என முருகன் கோரியதாகவும், அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டிஐஜி பாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும், முருகனின் மனைவி நளினி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.