சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் நெடுங்கால மாக கோரிக்கை வைத்து வரு கின்றனர். இதற்காக ரசிகர் களைச் சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து வருகிறார். காந்திய மக்கள் இயக்கத் தலை வர் தமிழருவி மணியன் நடத்திய அரசியல் மாநாட்டை ரஜினி தமிழக அரசியலில் நுழைவதற் கான வெள்ளோட்டமாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரபூர்வ அறி விப்பை ரஜினி விரைவில் வெளி யிடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 2வது வாரத்தில் ரசிகர்களை அவர் சந்திக்க விருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை அவர் சந்திப் பார் எனத் தெரிகிறது. இதுவரை 15 மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்தித்துள்ளார்.
மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்
1 mins read

