கையை வெட்டி ரூ.19 லட்சம் கொள்ளை

கையை வெட்டி ரூ.19 லட்சம் கொள்ளை

1 mins read

போரூர்: பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த தவமணிகண்டன் என்பவர் நெற்குன்றத்தில் உள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பிற்ப கலில் அவர் அடையாளம் பட்டில் உள்ள தனியார் வங்கி யில் ரூ.19 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளையர்கள் தவமணி கண்டனை வழிமறித்தனர். பின்னர் அவரிடமிருந்த பணப் பையைப் பறித்தனர். அதிர்ச்சி அடைந்த தவமணிகண்டன் கொள்ளையர்களைத் தடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தவமணி யின் கையைக் கத்தியால் வெட்டிவிட்டு ரூ.9 லட்சம் இருந்த பணப் பையைப் பறித்து தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலிசார் தேடுகின்றனர்.