புதுடெல்லி: நிதிமுறைகேடு, ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளி நாடு சென்றுவிடாமல் தடுக்க 'லுக்அவுட் நோட்டீஸ்' அனுப்பி யதற்கு தகுந்த காரணங்கள் உள்ளன என்று உச்ச நீதிமன்றத் தில் சிபிஐ மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த 'ஐஎன் எக்ஸ் மீடியா' என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டைப் பெறும் நோக் கில் அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றுத் தர தமது செல்வாக்கை பயன்படுத் தியதாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட் டிருந்தது. இது தொடர்பான விசார ணைக்கு நேரில் வருமாறு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. ஆனால், அந்த ஆணையை கார்த்தி புறக்கணித்ததால் அவ ருக்கு எதிராகத் தேடப்படும் நபர் என்னும் அறிவிப்பு (லுக் அவுட் நோட்டீஸ்) பிறப்பிக்கப்பட்டது.
விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் சென்றபோது. படம்: ஊடகம்

