ஆளுநர் அழைக்காவிட்டால் அதிபரிடம் முறையிட முடிவு

ஆளுநர் அழைக்காவிட்டால் அதிபரிடம் முறையிட முடிவு

1 mins read

புதுச்சேரி: புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் சார்பில் தங்க தமிழ் செல்வன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். "சட்டமன்றத் தலைவர் இரண்டாவது முறையாக அனுப்பிய விளக்கக் கடிதத்துக்கு 19 எம்எல்ஏக்களும் வரும் 5ஆம் தேதி முதல் பேரவைத் தலைவரை தனித்தனியாகச் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளோம். முதல்வரை நீக்குவதே எங்களது கோரிக்கை. ஆட்சியைக் கவிழ்ப்பது எங்கள் எண்ணம் இல்லை. ஆளுநர் விரைவில் எங்களை அழைப்பார் என நம்பிக்கை உள்ளது. ஆளுநர் அழைக்காதபட்சத்தில் எங்கள் அணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு அதிபரைச் சந்தித்து முறையிட உள்ளோம்," என்று தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டார்.