கோவை: நதிகளைக் காக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு வாகனப் பேரணியை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கன்னியாகுமரியில் தொடங்கு கிறார். 16 மாநிலங்கள் வழியாக 30 நாட்கள் சுமார் 7,000 கி.மீ. தூரம் வாகனத்தில் சென்று அக்டோபர் 2ஆம் தேதி டெல்லியில் பேரணியை அவர் நிறைவு செய்கிறார். அழிந்து வரும் நதிகளை மீட்டு மீண்டும் பெருக்கெடுத்து ஓடச் செய்யும் வகையில் 'நதிகளை மீட்போம்' என்னும் தேசிய அளவிலான இயக்கம் சார்பில் நாடு முழுவதும் வாகனப் பேரணி நடத்தப்படுகிறது.
நதிகளின் அவசியத்தை வலியுறுத்தி வாகனப் பேரணி
1 mins read

