சென்னை: வடமாநில வாலிபர் களின் 'ஈவ் டீசிங்' எனப்படும் காமக்குறும்பு தொல்லை தாங்கமுடியாமல் ஓடும் ரயி லில் இருந்து கீழே குதித்த பெண் பொறியாளர் ஒருவர் தலையில் காயம் அடைந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நிஜாமு தின் நகர் நோக்கி மில்லி னியம் விரைவு ரயில் புறப்பட் டது. ஆந்திர மாநிலம் விஜய வாடாவுக்குச் செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை மூன்று பெண்கள் அந்த ரயி லில் ஏறினர். அவர்கள் மூவ ரும் சென்னையில் துபாய் நிறுவன மென்பொருள் பொறி யாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அந்தப் பெண்கள் அமர்ந் திருந்த ரயில் பெட்டியில் வட இந்தியாவைச் சேர்ந்த இந்தி பேசும் மூன்று வாலிபர்களும் பயணம் செய்தனர். அவர்கள், அந்த மூன்று பெண்களையும் 'ஈவ் டீசிங்' செய்யத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல அவர்களின் செயல் மோசம் அடைந்து தொந்தரவு அதிகரித்தது.
மிகவும் ஆபாசமான முறை யில் அந்தக் கும்பல் சைகை செய்து தொல்லை கொடுத் தது. அந்தப் பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் பெண் களைத் தற்காக்க முன்வர வில்லை. இதனால், அந்த மூன்று பெண்களும் செய்வது அறியாமல் திகைத்தனர். ஒரு கட்டத்தில், 'ஈவ் டீசிங்' தொல்லையை தாங்க முடியாமலும் தப்பிக்கும் முயற் சியாகவும் அந்த மூன்று பெண்களில் ஒருவரான ஷேக் அரிஃபா, 21, ஓடும் ரயிலில் இருந்து குதித்துவிட் டார். அப்போது ரயில் ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. தங்கள் தோழி கீழே குதித்ததைப் பார்த்தவுடன் மற்ற இரு பெண்களும் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். கீழே விழுந்து கிடந்த ஷேக் அரிஃபா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலையிலும் கைகளிலும் காயம் ஏற்பட்டதால் அந்தப் பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.
காயமடைந்து சிகிச்சை பெறும் ஷேக் அரிஃபா. படம்: ஊடகம்

