ரியோ டி ஜெனிரோ: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகி றது. தென் அமெரிக்க நாடுகளுக் கான தகுதிச் சுற்றில் ஈக்குவாடோ ருக்கு எதிரான ஆட்டத்தில் 2=0 எனும் கோல் கணக்கில் பிரேசில் வாகை சூடியுள்ளது. இதன் மூலம் பிரேசில் தகுதிச் சுற்று பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. ஈக்குவாடோருக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசிலின் வெற்றிக்குப் பிற்பாதி ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங் கிய கோட்டினோ முக்கிய காரணமாக அமைந்தார். ஆட்டத்தின் 69வது நிமிடத் தில் அவர் கோல் போட்டார். அதனைத் தொடர்ந்து பிரேசிலின் இரண்டாவது கோலைப் போட கேப்ரியல் ஜீசஸுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.
மற்றோர் ஆட்டத்தில் சிலியை 3-0 எனும் கோல் கணக்கில் பராகுவே தோற்கடித்தது. இதற்கிடையே, உருகுவேவுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் இடையி லான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. இதனால் பட்டியலில் ஐந் தாவது இடத்தை அர்ஜெண்டினா தொடர்ந்து வகிக்கிறது. பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வரும் குழுக்கள் உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். ஐந்தாவது நிலையில் உள்ள குழு மேலும் இரண்டு ஆட்டங்களில் களமிறங்கி வெற்றி பெறவேண்டும்.

