$118 பி. செலவில் 60 ஆறுகள் இணைப்பு

$118 பி. செலவில் 60 ஆறுகள் இணைப்பு

1 mins read
7303aba7-094a-42ac-af6d-2f0d33bdc945
Google News Preferred Icon

ஒருபுறம் கடும் வெள்ளம், இன் னொரு புறம் குடிநீருக்கே திண் டாடும் வகையில் வறட்சி! இத்த கைய சூழலில் முக்கிய ஆறுகளை இணைத்து அந்தப் பிரச்சினை களுக்குத் தீர்வுகாண இந்திய அரசு முடிவு செய்துள்ளது. வற்றாத கங்கை உட்பட 60 ஆறுகளை இணைக்கத் திட்ட மிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கவிருப்பதாகவும் அர சாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு ரூ.550,000 கோடி (S$118 பில்லியன்) செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மைய வாரங்களில், இந்தியா, நேப்பாளம், பங்ளாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகளில் மழை வெள்ளம் காரணமாக 1,200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சில நாட்களுக்குமுன் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை வெள்ளத்தில் மிதந்தது. பீகார், அசாம் ஆகிய மாநிலங் களும் வெள்ளத்தால் கடுமை யாகப் பாதிக்கப்பட்டன. இப்படி வட, வடகிழக்கு மாநி லங்கள் ஓயாத மழையிலும் வெள்ளத்திலும் சிக்கித் திண்டாட, தென்மாநிலமான தமிழகத்தில் குடிநீர் 'ரேசன்' முறையில் விநி யோகிக்கப்பட்டு வருவது முரண் பாடான அம்சம்.