ஆளுநர் சொல்வதை ஏற்க இயலாது: திருமாவளவன் திட்டவட்டம்

ஆளுநர் சொல்வதை ஏற்க இயலாது: திருமாவளவன் திட்டவட்டம்

1 mins read
ff5ae536-fa53-435c-bc8f-a71fc99fbb2f
-

மதுரை: முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை அதிமுக மீண்டும் பெறுவதற்காகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலைத் தாமதப்படுத்துவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசுக்குத் தற்போது பெரும்பான்மை பலம் இல்லை என்றார். எனவே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "அதிமுகவில் நடப்பது உட்கட்சிப் பிரச்சினை என ஆளுநர் கூறுவதை ஏற்க முடியாதது. இங்கு நடக்கும் நிகழ்வுகளுக்குப் பின்னணியில் பாஜக உள்ளது என்பதை மறுக்க முடியாது," என்றார் திருமாவளவன்.