குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி சிறையில் உண்ணாவிரதம்

குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி சிறையில் உண்ணாவிரதம்

1 mins read
ec9bd228-8880-48de-aef0-ba508ace0e15
-

கோவை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி வளர்மதி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் ஆகியவற்றைக் கைவிட வேண்டும், தன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை எவ்வித நிபந்தனையும் இன்றி திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிறையில் தன்னைப் பார்க்க வருவோரை உளவுத்துறையினர் மிரட்டுவதாக வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார் எனத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கின்றது.2017-09-03 06:00:00 +0800