சென்னை: உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவை அடுத்து தமிழகத்தில் மூடப்பட்ட ஆயிரம் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப் பட்டுள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், முழுமையான மது விலக்கை அமல்படுத்த வலியு றுத்துபவர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந் துள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் அதி ரடியாக உத்தரவு பிறப்பித் திருந்தது. அதன் பேரில், கடந்த மார்ச் 31ஆம் தேதிக்குள் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 3,900 மதுக் கடைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட டாஸ்மாக் நிர்வாகம் 1,183 மதுக் கடைகளை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்தது. மீதம் இருந்த சுமார் 2,800 மதுக்கடை கள் மூடப்பட்டன. இதனால் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடி வந்த சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந் தனர். இந்நிலையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களைச் செய்துள்ளது.
சென்னையில் ஒரு மதுக்கடை முன்புகாத்திருக்கும் மதுப் பிரியர்கள். படம்: ஊடகம்

