2 பெண்களுக்கு ஒரே மணமகன்: 'வாட்ஸ்-அப்' மூலம் பரவிய திருமண அழைப்பிதழ் பரபரப்பு

2 பெண்களுக்கு ஒரே மணமகன்: 'வாட்ஸ்-அப்' மூலம் பரவிய திருமண அழைப்பிதழ் பரபரப்பு

2 mins read
4f888fa3-096d-42e7-8247-87b954cf502e
-

விருதுநகர்: ஒரே மணமகன் இரு பெண்களை மணக்க இருப்பதாக அச்சிடப்பட்ட அழைப்பிதழால் விருதுநகரில் பரபரப்பு நிலவியது. எனினும் மணமகனின் குடும்பத் தார் அவருக்கு ஒரு பெண்ணுடன் மட்டுமே திருமணம் நடக்கும் என சமூக நல அதிகாரியிடம் உறுதி மொழிப் பத்திரம் அளித்தனர். திருச்சுழி அருகே உள்ள ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. 31 வயதான இவர் கல்வியறிவு பெறாத நிலையில் ஆடு மேய்த்து வருகிறார். மேலும் பெற்றோரை இழந்த ராமமூர்த்தி தனது மூத்த சகோதரி கலைச் செல்வி வீட்டிலேயே வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமமூர்த்திக்குத் திருமணம் செய்துவைக்க குடும் பத்தார் முடிவு செய்தனர். இதை யடுத்து கலைச்செல்வி மகள் ரேணுகா தேவி (21 வயது), மற் றொரு சகோதரி மகள் காயத்ரி (20 வயது) ஆகிய இருவரையுமே அவருக்கு மணம் முடிக்க முடிவானது.

ஒரே மேடையில் இரு பெண் களையும் ராமமூர்த்தி மணக்க இருப்பதாகக் குறிப்பிட்டு 4 ஆம் தேதி (நாளை) திருமணம் என்று அறிவித்து பத்திரிகையும் அச்சடிக் கப்பட்டது. இந்தத் திருமண அழைப்பிதழை சிலர் சமூக வலைத்தளங்கள் வழி பகிர்ந்துகொண்டனர். இந்த வினோத திருமணம் குறித்து பலர் கிண்டலாகவும் கோபமாகவும் கருத்துகளைப் பதிவிடத் தொடங் கினர். ஒரு கட்டத்தில் இந்தத் தகவல் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆட்சியர் கவனத்துக்கும் கொண்டு செல்லப் பட்டது. இந்நிலையில் மணமகளின் தந்தை அழகர்சாமி மற்றும் அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்தனர். அங்கு சமூகநலத்துறை அதிகாரி ராஜத் தைச் சந்தித்து, திருமண பத்தி ரிகையில் தவறாக 2 மணமகள் களின் பெயரைக் குறிப்பிட்டு விட்டதாகவும், தவற்றைச் சரி செய்து புதிய பத்திரிகை அச்சடித் திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். "திருமண நாளன்று ஒரு பெண்ணுடன் மட்டுமே திருமணம் நடக்கிறதா என சமூக நலத்துறை ஊழியர்கள் கண்காணிப்பார்கள்," என அதிகாரி ராஜம் கூறினார்.

உறுதிமொழிப் பத்திரம் அளித்த உறவினர்கள். படம்: தகவல் ஊடகம்