நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட அறிவுரை

நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட அறிவுரை

1 mins read

பெங்களூரு: இந்தியா முழுவதும் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 800 பொறியியல் கல்லூரி களை மூட 'ஏஐசிடிஇ' எனும் அகில இந்திய தொழில்நுட்ப மன்றம் அறிவுறுத்தியுள்ளது. "கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து 30 விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பொறியியல் கல்லூரி களை மூட ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது," என்று 'ஏஐசிடிஇ' வலியுறுத்தியது. அதே சமயத்தில் அருகில் உள்ள பொறியியல் கல்லுரிகளோடு இணைத்துக் கொள்ளவும் மன்றம் வாய்ப்பு அளித்துள்ளது. இதன் தொடர்பில் பேசிய ஏஐசிடிஇயின் தலைவர் அனில் டி. சஹஸ்ரபுத்தே, ஒவ்வொரு பொறி யியல் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை குறித்த புள்ளி விவரங் களை ஆராய்ந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரி வித்தார்.

இருப்பினும் இந்த வகையில் மூடப்படும் கல்லூரிகளின் பெயர் களை மன்றம் வெளியிடவில்லை. இந்தியாவிலேயே அதிக எண் ணிக்கையில் பொறியியல் கல் லூரிகள் செயல்படும் மாநிலங் களின் பட்டியலில் தமிழகம் இரண் டாவது இடத்தில் உள்ளது. ஆனால் எத்தனை கல்லூரி களில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்ற விவரம் தெரியவில்லை. கல்லூரியை மூடுவதா அல்லது அருகில் உள்ள பொறியியல் கல் லூரியுடன் இணைப்பதா என்பது குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் பொறியியல் கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாற்றம் 2018-19ம் கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும்.