மத்திய அரசு: எகிப்திலிருந்து மேலும் 9,000 டன் வெங்காயம் இறக்குமதி

மத்திய அரசு: எகிப்திலிருந்து மேலும் 9,000 டன் வெங்காயம் இறக்குமதி

1 mins read
36084eee-f801-46a2-a2d2-f5694c3cb8ee
-

புதுடெல்லி: எகிப்திலிருந்து மேலும் 9,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்தது. ஏற்கெனவே 2,400 டன் வெங் காயம் இறக்குமதி செய்யப்பட்டது என்றும் அது கூறியது. இந்திய சந்தையில் வெங்காயத் துக்கு நிலவும் தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ வெங் காயம் ரூ.50க்கு விற்பனை செய் யப்படுகிறது. மேலும் பல இடங்களில் வெங் காயத்துக்குத் தட்டுப்பாடு நிலவு கிறது. இந்நிலையில் விளைச்சல் குறைவால் விலையேற்றம் ஏற் பட்டதாகக் கூறப்படுவதை மத் திய நுகர்வோர் நலத்துறை மறுத் துள்ளது. வெங்காயத்தை சிலர் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப் பாட்டை உருவாக்குகின்றனர் என்று அது குறிப்பிட்டது. இத்தகைய வெங்காய பதுக் கல்களை தடுத்து நிறுத்துமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வெங்காய விலையேற்றம், இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் உயர் அதிகாரிகள் அண்மையில் ஆலோ சனை நடத்தினர். இதில் எகிப்திலிருந்து வெங் காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த வாரங்களில் மட்டும் 2,400 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் 9,000 டன் விரைவில் இறக்குமதி செய்யப்படவுள்ள தாகவும் தெரிகிறது.