புதுடெல்லி: தேர்தலில் பொது மக்கள் வாக்களிப்பதை கட்டாய மாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில் போன்ற நாடுகளில் வாக் களிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதுபோல இந்தியாவிலும் வாக்களிப்பு கட்டாயமாக்க வேண்டும் என்று மனுவில் தெரி விக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே. செல்ல மேஸ்வர், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, வாக்களிப்பை கட்டாயமாக்க வேண்டும் என்று எங்களால் நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறியது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பேசிய தலைமைச் சட்ட அதிகாரி கே.கே.வேணு கோபால், "மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒருவருக்கு வாக்க ளிக்கவும் அல்லது வாக்களிக் காமல் இருக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். வாக்களிக்க விரும்ப வில்லை என்பதை வாக்காளர் தெரிவிக்க 'நோட்டா' வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது," என்றார். இந்நிலையில் விரிவான விசார ணை பின்னர் நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வாக்களிப்பை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதிமன்றம்
1 mins read
-

