சென்னை: முதல்வர் பழனிசாமி அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தி ருப்பதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. குறிப்பாக சசிகலா குடும்பத்தினர் எந்த நேரத்தில் எந்தவிதமான பிரச்சினைகள் முளைக்குமோ எனப் பதற்றத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலா சிறைக்குச் சென்றதும் கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தினகரனுக்கு தொடக் கத்தில் பழனிசாமியும் ஆதர வாகவே இருந்தார். ஆனால் தின கரன் சிறைக்குச் சென்றதும் அவர் கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை வலுப்படுத்தும் நடவடிக் கைகளை மிகக் கச்சிதமாக மேற்கொண்டதாக அரசியல் கவ னிப்பாளர்கள் கருதுகின்றனர். தினகரன் சிறைக்குச் சென்ற தும் கட்சியைத் தன் கட்டுப்பாட் டுக்குள் வைத்திருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கருதினார்.
ஆனால் தன் பேச்சை முதல்வர் பழனிசாமி புறந்தள்ளுவ தாகத் தகவல் கிடைத்தபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தினகரனும் திவாகரனும் இணைந்தபோது, பழனிசாமியின் முதல்வர் பத விக்கு ஆபத்து நேரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ மிக சாமர்த்தியமாகச் செயல்பட்டு தம்மை எதிர்த்து நின்ற ஓ.பன் னீர்செல்வம் அணியைத் தன்வசம் இழுத்துவிட்டார். மேலும் பன்னீர் செல்வத்துக்கும் பதவி கொடுத்து சாந்தப்படுத்தி உள்ளார். அடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை, போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடம் ஆக்குவது உள்ளிட்ட அறிவிப்பு களை வெளியிட்டவர், இப்போது ஜெயா தொலைக்காட்சி, நமது எம்ஜிஆர் நாளேடு ஆகியவற்றை யும் கட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்போவதாக தெரி வித்துள்ளார். இந்த நடவடிக்கை களைத் தடுக்க முற்பட்டால் தங்களுக்குப் பிரச்சினை ஏற்படும் என சசிகலா குடும்பத்தார் கருது வதாகத் தெரிகிறது. சசிகலா, இளவரசி இருவரும் சிறையில் இருக்கும் நேரத்தில், தாங்களும் சட்ட ரீதியிலான போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடுமோ என சசிகலா குடும் பத்தினர் மிகவும் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் பழனிசாமி

