தற்காப்பு அமைச்சராக நிர்மலா நியமனம்

தற்காப்பு அமைச்சராக நிர்மலா நியமனம்

2 mins read
711406e1-e53c-4bb6-9b3e-36c9f10686ec
-

இந்தியாவில் நேற்று மாற்றியமைக் கப்பட்ட அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் (படம்) தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் இரும்புப் பெண் மணி என்று வர்ணிக்கப்படும் முன் னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பின்னர் பெண் ஒருவர் இந்திய தற் காப்பு அமைச்சர் பொறுப்பை ஏற்று இருப்பது இப்போதுதான். தமிழ்நாட்டின் மதுரை நகரில் பிறந்த திருவாட்டி நிர்மலா, 58, இளங்கலை பட்டத்தை திருச்சி யிலும் பொருளியல் முதுகலைப் பட்டப் படிப்பை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின் றார். அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ஆந்திராவைச் சேர்ந்த பராகலா பிரபாகர் என்பவரைக் காதலித்து மணந்துகொண்டார். பிரபாகர், காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவரது தந்தை 1970களில் ஆந்திர மாநில அமைச் சராக இருந்தவர். அண்மையில் கர்நாடக மாநிலம் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாட்டி நிர்மலா, வர்த்தக, தொழில் துறை இணை அமைச்சராக இருந்து வந்தார். 2014ல் பிரதமர் ஆன பின்னர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று தமது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். ஒன்பது புதுமுகங்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உள்ளனர். 4 இணை அமைச்சர்கள் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட் டனர். அவர்களில் நிர்மலாவும் ஒரு வர். மனோகர் பாரிக்கர் சில மாதங் களுக்கு முன்பு கோவா முதல்வராகப் பொறுப்பேற்றதால் தற்காப்பு அமைச்சர் பதவியை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று வரை கூடு தலாகக் கவனித்து வந்தார். 40 நாட்களுக்கு முன்னர் அதி பராகப் பொறுப்பேற்ற ராம் நாத் கோவிந்த் நேற்று புதிய அமைச் சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.