நிதிஷ் குமார்: பாஜகவுடன் ஜனதா தளத்துக்கு நல்ல உறவு தொடர்கிறது

நிதிஷ் குமார்: பாஜகவுடன் ஜனதா தளத்துக்கு நல்ல உறவு தொடர்கிறது

1 mins read
ba71c2dc-9cad-4506-8b08-785a7046764b
-

பாட்னா: அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மத்திய அமைச் சரவையில் இடம் அளிக்கப்பட லாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் அமைச்சர வையில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் கூறியதாவது, "இம்முறை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நான் சற்றே எதிர்பார்ப்புடன் இருந்தேன். "ஏனெனில் இதில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறும் என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. எந்த முகாந்திரமும் இன்றி எனது கட்சியின் பெயர் இவ் விவகாரத்தில் வேண்டும் என்றே இழுக்கப்பட்டது. தற்போதைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டிய அவசியமில்லை. பீகாருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. இது முழுவதும் ஊடகங்களால் ஊதிப் பெரிதுபடுத்தப்பட்டது. வேறு எந்தக் காரணமும் இல்லை. பாஜகவுடன் எங்கள் உறவு நல்ல முறையில் உள்ளது என்றார்.