மும்பை: பெண்ணை அவமதிக்கும் வகையில் தரக்குறைவாக பேசிய ஒருவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் நீதி மன்றம் கலையும் வரை அங்கேயே அமர்ந்திருக்க வேண்டும் எனவும் மும்பை நீதிமன்றம் நேற்று உத்தர விட்டுள்ளது. மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த தம்பதியர், கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி காலையில் நடைப் பயிற்சி மேற்கொண்டனர். அதே குடியிருப்பைச் சேர்ந்த சுதிர் என்பவர் அங்குள்ள குப்பைத் தொட்டியில் குப்பை கொட்ட வந்தார். அந்த நேரத்தில் குப்பை கொட்டும் வாளி கைதவறி வீடு திரும்பி கொண்டிருந்த அந்த தம்பதியர் மீது விழுந்தது. அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுதிர் அந்தப் பெண்ணை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் உள்ளூர் போலிசில் புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதைத்தொடர்ந்து, அவர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு தொடர்பான விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
பெண்ணிடம் தரக்குறைவாகப் பேசியவருக்கு 1 ரூபாய் அபராதம்
1 mins read

