நவீன் ஜிண்டாலுக்கு பிணை

நவீன் ஜிண்டாலுக்கு பிணை

1 mins read
49f503e7-881c-4b08-9e7f-a77e2ccbe0df
-

புதுடெல்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முறைகேடாக சுரங்கங்களைப் பெற்ற நிறுவனங் கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு நபர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அவ்வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் உர்தன் வடக்கு நிலக்கரிச் சுரங்கத்தை முறைகேடாகப் பெற்ற தாக ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவன இயக்குனர் நவீன் ஜிண்டால், நிர்வாகிகளான சு‌ஷில் மாரோ, ஆனந்த் கோயல் மற்றும் விக்ராந்த் குஜ்ரால் ஆகியோர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜிண்டால் உள்ளிட்ட நால்வரும் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுக்களை நேற்று விசாரித்த சிறப்பு நீதிபதி, அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணை அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர் நவீன் ஜிண்டால் மீது, ஜார்க்கண்ட் மாநிலம் அமர் கோண்டா முர்கதங்கல் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்திற்கு வெளியில் நவீன் ஜிண்டால். படம்: ஊடகம்