இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனை களில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் உயிரிழப்பது தொடர் சம்பவங்களாகி வருகிறது. கோரக்பூர் அரசு மருத்துவ மனையில் பிராணவாயு பற்றாக்குறையால் இந்த ஆண்டு முழுவதும் 1,300க்கு மேற்பட்ட குழந்தைகள் மாண் டன. கடந்த வெள்ளி, சனிக் கிழமைகளில் மேலும் 13 குழந்தைகள் அந்த மருத்துவ மனையில் உயிரிழந்தன. பிராணவாயு சாதனத்தை விநியோகித்த நிறுவனத் துக்குப் பணம் கொடுக்காத தால் பிராணவாயு விநியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தியிருக்கிறது. இதனால் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்து வருகின்றன. இந்த நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சியாக உத்தரப்பிரதேசத் தின் ஃபருகாபாத்தில் உள்ள ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையிலும் பல குழந்தைகள் மாண்ட சம்பவம் பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 49 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அக்குழந்தை கள் பலியானதாக மருத்துவ மனை தரப்பில் கூறப்பட்டாலும் பிராணவாயு தட்டுப்பாடே இந்த குழந்தைகளின் மரணத்துக்கும் காரணம் என சொல்லப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக இட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், மாநில அர சுக்கு எதிராக அரசு மருத்து வர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ராம் மனோகர் லோகியா மருத்துவமனை அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப்பெறக் கோரி அரசு மருத்துவர்கள் அனை வரும் நேற்று வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர். அதனால் ஃபருகாபாத் வட்டாரத்தில் நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

