தமக்கு அடுத்த வாரிசை ஜெயலலிதா உருவாக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

தமக்கு அடுத்த வாரிசை ஜெயலலிதா உருவாக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

2 mins read
d287251f-ddf9-4af0-8447-3c7a67ac2303
-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமக்கான வாரிசு என்று எவரையும் உருவாக்கவோ அறிவிக்கவோ இல்லை என்று முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக ஆட்சிப் பொறுப்பையும் கட்சியையும் கைப்பற்ற சசிகலா தரப்பு தீவிரமாக முயன்றுவரும் வேளையில் பழனிசாமி இவ்வாறு தெரிவித்திருப்பது அரசியல் அரங் கில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாகப் பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரியில் நேற்று முன்தினம் நடை பெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பழனிசாமி, "சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமரமுடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அத னால்தான், தன் வாரிசாக யாரை யும் அவர் சுட்டிக்காட்டவில்லை. "27 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரே கட்சி அதி முகதான். என்னுடைய ஆட்சியைக் கவிழ்க்க துடிக்கிறார்கள்,

அதிமுக ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது," என்றார். "எம்ஜிஆர் பிறந்தார், வாழ்ந்தார் இறந்தார். ஆனால், அவர் வாழ்க்கையில் செய்த சாதனைகள் இன்றும் மக்கள் மனதில் குடி கொண்டிருக்கிறது. அதேபோல, தமது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்காக உழைத் தவர் ஜெயலலிதா. "கடைக்கோடித் தொண்டனும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விருப்பப்பட்டவர் ஜெயலலிதா. அவரது சமதர்மக் கொள்கைதான் என்னைப் போன்ற ஒரு சாதாரண விவசாயியின் மகனை ஆட்சிப் பொறுப்பேற்க வைத்துள்ளது. "தொழில் முதலீடுகளை ஈர்ப் பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதலீட்டாளர்கள் விரும்பும் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழில்துறை யில் தமிழகத்தை 3வது மாநிலமாக உயர்த்திக்காட்டியவர் ஜெயலலிதா. "அப்படிப்பட்டவர் உருவாக்கித் தந்த ஆட்சிப் பொறுப்பைத் தட்டிப் பறிக்க அதிமுகவில் இருந்து கொண்டே சிலர் எதிர்க்கட்சிபோல செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற னர்," என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பழனிசாமியை முதல்வர் பதவி யிலிருந்து அகற்ற திமுக, காங் கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஒரு பக்கமும் டிடிவி தினகரன் தரப்பி னர் மற்றொரு பக்கமும் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்காக பொறுப்பு ஆளுநரை இருதரப்பும் சந்தித்துப் பேசியுள்ளன.