அனிதா மரணம்: நீடிக்கும் போராட்டங்கள்

அனிதா மரணம்: நீடிக்கும் போராட்டங்கள்

1 mins read

சென்னை: மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் கொந் தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 'நீட்' தேர்வை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் கும்ப கோணம் அரசு கலை கல்லூரி, தஞ்சை மன்னர் சரபோஜி, குந் தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரிகளிலும் திருச்சி, மயிலா டுதுறை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக் கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதே போல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தி லும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கள் போராட்டக் களத்தில் குதித் தனர்.

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென் னையில் பாஜக அலுவலகம், முதல்வர் வீடு ஆகியவற்றை முற் றுகையிட முயன்றவர்கள் கைதா கினர். மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேற்றும் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையே சென்னை லயோலா கல்லூரியில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக அரசு அளித்துள்ள ரூ.7 லட்சம் நிதியை பெற்றுக் கொள்ள அனிதா குடும் பத்தினர் மறுத்துவிட்டனர். நீட் தேர்வை ரத்து செய்த பிறகே அத் தொகையைப் பெற முடிவு செய் துள்ளதாக அவர்கள் தெரிவித் தனர். இதற்கிடையே மெரீனா கடற்கரையில் போலிசார் கண் காணிப்பு தீவிரமடைந்துள்ளது.