ஓபிஎஸ் விமர்சனம்: கனவு காண்கிறார்கள்

ஓபிஎஸ் விமர்சனம்: கனவு காண்கிறார்கள்

1 mins read

திருவள்ளூர்: ஒரு குடும்பத்தின் ஆட்சி இருக்கக் கூடாது என்று சொன்னதற்காக, துணை முதல் வர் பதவியில் இருந்து தாம் விலக வேண்டும் என சிலர் கூறி வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், ஜெயலலி தாவின் பொற்கால ஆட்சியைக் காப்பாற்ற, எந்தத் தியாகத்தையும் மக்கள் சக்தியோடு செய்வதற்கு ஜெயலலிதாவின் பிள்ளைகள் தயங்க மாட்டார்கள் என்றார். "ஜெயலலிதாவிடம் தோற்றுப் போனவர்களும், அவருக்கு துரோ கம் செய்தவர்களும், இந்த ஆட் சியை அசைத்துப் பார்த்து விட லாம் என்று கனவு காண்கிறார் கள்," என்றார் ஓபிஎஸ். 'கடவுளுக்குப் பூஜை செய்ய, மல்லிகைப் பூ இருக்கலாம். ரோஜாப் பூ இருக்கலாம். சாமந்திப் பூ இருக்கலாம். ஆனால், ஊமத்தம் பூ இருக்கக் கூடாது,' என சசிகலா தரப்பை அவர் மறைமுகமாக விமர்சித்தார்.