திவாகரன்: எம்எல்ஏக்களை மிரட்டுகிறது முதல்வர் தரப்பு

திவாகரன்: எம்எல்ஏக்களை மிரட்டுகிறது முதல்வர் தரப்பு

1 mins read

தஞ்சை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விரைவில் மண்ணை கவ்வும் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தார். கும்பகோணத் தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டம் மற்றும் ஆலோ சனைக் கூட்டத்திற்கு தங்களை அழைக்காவிட் டாலும் இப்போராட்டம் உன்னதமானது என்று பாராட்டு தெரிவித்தார். தமிழக மாணவர்கள், அதிமுகவினரின் மன நிலையும் நீட் தேர்வுக்கு எதிராகவே உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், தினகரன் ஆதரவாளர்கள் மீது மட் டுமே திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வழக்குகளைப் பதிவு செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

காவல்துறை அதிகாரிகள் முதல்வர் பழனிசாமி அணியின் மாவட்ட செயலர்கள் போன்று செயல்படுவதாக விமர்சித்த அவர், எடப்பாடி அரசு தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ளவே தங்கள் நேரத்தை செலவிடு வதால், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொது மக்கள் பலரும் பாதிக்கப்படுவ தாகக் குறை கூறினார். "நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத் தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொள்வர் எனக் கூறியது எனது தனிப்பட்ட கருத்து. தினகரன் அணியில் உள்ள எம்எல்ஏக்களை இடைத்தரகர்களாக மாற்றி தங்கள் வசமிழுக்க எடப் பாடியும் பன்னீர்செல்வமும் முயற்சி செய்கின்றனர். இதற்காக எம்எல்ஏக்களை மிரட்டுகின்றனர்," என்றும் திவாகரன் சாடினார்.