எட்டு அமைச்சர்கள் பதவி விலகத் தயார்; முதல்வருக்குப் புதுச் சிக்கல்

எட்டு அமைச்சர்கள் பதவி விலகத் தயார்; முதல்வருக்குப் புதுச் சிக்கல்

1 mins read

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என தினகரன் தரப்பு வரிந்துகட்டி உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவைக் கூட்டப்போவதாக அறிவித்துள்ளார் பழனிசாமி. அக்கூட்டத்தில் சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பழனிசாமி தரப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 8 அமைச்சர்கள் உடனடியாக பதவியில் இருந்து விலகுவர் என தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதையறிந்த முதல்வர் தரப்பு சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அடையாளம் கண்டு சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.