திருச்சியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் மரணம்

திருச்சியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் மரணம்

1 mins read

திருச்சி: மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் தந்தை, மகன் உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி பல மணி நேரம் நீண்டது. நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. அக்குறிப்பிட்ட கட்டடத்தில் ஆறு குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் காலை சுமார் 5.30 மணியளவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் கட்டடத்தின் ஒருபகுதி திடீரெனச் சரிந்தது. இதனால் 6 குடும்பங்களைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் கார்த்திக், அவரது ஐந்து வயது மகன் ஹரிஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.