நீட்: அதிமுக ஏற்கவில்லை; தம்பிதுரை விளக்கம்

நீட்: அதிமுக ஏற்கவில்லை; தம்பிதுரை விளக்கம்

1 mins read

சென்னை: நீட் தேர்வு விவகா ரத்தில் அடுத்த கட்ட நடவ டிக்கை குறித்து சட்ட வல்லு நர்களுடன் ஆலோசித்து வருவ தாக நாடாளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரை தெரிவித் துள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், மாணவி அனிதாவின் மரணம் வேதனை அளிப்பதாகக் கூறினார். இனி மேல் எந்த மாணவரும் இது போன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். நீட் தேர்வை தமிழக அரசு ஒருபோதும் ஏற்கவில்லை என் றும் தம்பிதுரை மேலும் குறிப் பிட்டார். இதற்கிடையே தமது டுவிட்டர் பதிவு ஒன்றில், நீட் தேர்வு முறையைக் கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரசும் தான் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சாடியுள்ளார். நீட் தேர்வைக் கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவும் காங்கிரசும்தான் முன்மொழிந்த தாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்காக அந்த இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் வெட்கப்பட் டுத் தலைகுனிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.