பெங்களூரு: தொடர் கனமழையால் பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை களில் தண்ணீர் தேங்கிய தால் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டுள்ளது. பெங்களூரில் கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து இரவு நேரங்களில் மழை கொட்டி வரு கிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. கால்வாய்களை ஒட்டிய பகுதி யில் மழை நீருடன் சாக்கடை நீரும் குடி யிருப்புகளில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள் ளது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தூக்கத்தை இழந்து தவிக் கின்றனர். நகரில் பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. எச்.எச்.ஆர்.லே-அவுட், காக்ஸ் டவுன், அல்சூர் உள்ளிட்ட பகுதி கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள் ளன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் கன மழை பெய்தது. விடியற்காலை வரை இந்த மழை நீடித்தது. இதனால் ஹெப்பால், தனி சந்திரா, லால்பாக், சாங்கி-டாங்கி உள் ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறுகிறது.
பெங்களூரின் 'எச்.எச்.ஆர். லே=அவுட்' குடியிருப்புப் பகுதியில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள். படம்: ஊடகம்

