நட்புறவுப் பாதையில் நடைபோட இந்தியாவுக்குச் சீனா அழைப்பு

நட்புறவுப் பாதையில் நடைபோட இந்தியாவுக்குச் சீனா அழைப்பு

1 mins read

பெய்ஜிங்: இந்தியாவுடன் சுமூக மான போக்கில் நட்புறவுப் பாதை யில் நடைபோடுவதற்கு டெல்லியு டன் இணைந்து செயல்படப் போவதாக சீன அதிபர் ஸி ஜின்பிங், நேற்று இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டத்தில் இந்தி யப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார். சீனாவின் சியாமெனில் நடந்த பிரிக்ஸ் சார்பிலான வரு டாந் திர உச்ச மாநாட்டில் இந்திய, சீனப் பிரதமர்கள் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். டோக்லாம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் இருந்தது இரு நாடுகளுக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு. அதனையடுத்து சீன அதிபர் வெளியிட்ட அறிக்கை, டோக்லாம் பிரச்சினையில் இந்தியாவின் கோபத்தைத் தணிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சீன அதிபர் ஜின்பிங்பின் அந்த அறிக்கையில், "இந்தியாவும் சீனாவும் முக்கியமான அண்டை நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்து வரும் மிகப்பெரிய நாடுகள். "இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஆரோக் கியமானதாகவும் நிலைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப சரியான பாதையில் செல்வதற்கு இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட சீனா தயாராக இருக்கிறது. "1954ஆம் ஆண்டில் இந்தியா வும் சீனாவும் ஏற்படுத்திக் கொண்ட பஞ்சசீலக்கொள்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதன் வழிகாட்டுதலின்படி இந்தி யா வுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது," என்று கூறப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி தெரிவித்தது.