கோவை: போராட்டக்காரர்களை அடக்க முயன்றபோது, காவல் துறை பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துகொண்ட காவல்துறை ஆண் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான காணொ ளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதை யடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை நீக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. நேற்று முன்தினம் கோவை யில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடை பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங் கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர் களைக் கலைந்துபோகுமாறு போலிசார் அறிவுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து அனைவரையும் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்த போலிசார் முடிவு செய்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கி அதன் முடிவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சமயம் பெண் அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களை அடக்க முயன்றபோது, ஆண் அதிகாரி ஒருவர் அவரிடம் அத்துமீறியுள்ளார். அந்தப் பெண், தவறாக நடந்துகொண்ட அதிகாரியின் கைகளை சில முறை தட்டிவிடும் காட்சியும் காணொளிப் பதிவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து பொது இடத் தில் இவ்வாறு நடந்துகொண்ட அதிகாரியிடம் விசாரணை நடப் பதாகத் தெரிகிறது.
படம்: ஊடகம்

