சென்னை: அதிமுகவில் ஏற்பட் டுள்ள பிளவைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றலாம் என பாஜக நினைப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். நேற்று முன்தினம் மாலை சென்னையில் நடைபெற்ற முர சொலி பவள விழாவில் பேசிய அவர், பாஜக இப்போது எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுகிறது என விமர்சித்தார். மத்தியில் இப்போது நடப்பது மோடி ஆட்சி அல்ல என்றும், அது மோசடி ஆட்சி என்றும் அவர் சாடினார். "தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. மத்தியில் நடை பெறும் மோடி தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும். "கையாலாகாத அதிமுக அரசு மத்திய அரசுடன் கைகோர்த்து ஜனநாயக விரோதமாகச் செயல் படுகிறது. இன்றைக்கு மாணவி அனிதாவை பறிகொடுத்து இருக் கிறோம். சமூக நீதியைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வேறுபாடுகள், மாறு பாடுகளை நாம் மறக்க வேண் டும்," என்றார் மு.க.ஸ்டாலின். விழா மேடையில் அமர்ந்து உரையாடும் ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ படம்: சதீஷ்
நடப்பது மோடி ஆட்சி அல்ல; மோசடி ஆட்சி என்கிறார் ஸ்டாலின்
1 mins read
-

