சென்னை: தமிழகத்துக்கு இந்த ஆண்டு கிடைக்க வேண்டிய ரூ.4 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வில்லை என்று நகராட்சிகள் நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். "ஆண்டு தோறும் நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நிதி வழங்கி வருகிறது. மின் கட்டணம், சாலைப் பணிகள், உள்ளாட்சிக் கட்டமைப்புகளுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை," என்றார் பிரகாஷ்.
தேர்தல் நடத்தாததால் ரூ.4,000 கோடி நிதி கிடைக்கவில்லை
1 mins read

