பட்டப்பகலில் 300 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம் கொள்ளை

பட்டப்பகலில் 300 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம் கொள்ளை

1 mins read

சென்னை: பட்டப்பகலில் வீடு புகுந்த சிலர், சுமார் 300 பவுன் நகைகளையும், ரூ.10 லட்சம் ரொக்கத்தையும் கொள் ளையடித்துச் சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. 65 வயதான ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ராமன் மேற்கு தாம்பரம் பகுதியில் வசித்து வரு கிறார். இவரது மகன் உப்பிலி அமெரிக்காவில் பணியாற்று கிறார். கடந்த 3ஆம் தேதி உப்பி லிக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து மனைவியையும் பெற்றோரையும் தன்னுடன் அமெ ரிக்கா அழைத்துச் செல்ல திட்ட மிட்டார். இதற்கான விசாவைப் பெறுவதற்குரிய ஏற்பாடுகளைக் கவனிக்க உப்பிலியும் அவரது குடும்பத்தாரும் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்தனர்.

அப்போது சிலர் வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டுப் பின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், பீரோவையும் உடைத்து அதில் இருந்த 300 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள னர். மாலையில் வீடு திரும்பிய ராமன், பீரோ உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடி யாகப் போலிசிலும் புகார் செய்தார்.