இந்திய சுற்றுலா அமைச்சர்: வெளிநாட்டினர் மாட்டிறைச்சி உண்ட பின்னர் இந்தியா வரலாம்

இந்திய சுற்றுலா அமைச்சர்: வெளிநாட்டினர் மாட்டிறைச்சி உண்ட பின்னர் இந்தியா வரலாம்

2 mins read

இந்தியாவின் சில மாநிலங்களில மாட்டிறைச்சி உண்ண தடை உள் ளது. இந்நிலையில், அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற கே. ஜே.அல்போன்ஸ் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள் ளார். பசுக்கள் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வும் சில மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பதற்கான தடையும் இந்தியாவின் விருந் தோம்பல் துறையைப் பாதித்து உள்ளனவா என்று அவரிடம் வின வப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கள் தங்களது நாட்டில் மாட் டிறைச்சி உண்ட பின்னர் இந்தி யாவுக்கு வரலாம்," என்றார். ஒடிசா தலைநகர் புவனேஷ் வரில் இந்திய சுற்றுப் பயண நிறு வன சங்கத்தின் 33வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்ற திரு அல்போன்ஸ் செய்தி யாளர்களிடம் பேசினார்.

"மிகவும் பழமையான நாடு இந்தியா. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை வந்து பார்வையிட லாம். நமது வரலாற்றையும் நமது தேசத்தையும் நாம் நேசிக்க வேண் டும். இந்த அழகான நாட்டை நீங்கள் காணவேண்டும் என சுற்றுலாப்பயணிகளிடம் நாம் கூற வேண்டும்," என்றார் அவர். கடந்த திங்கட்கிழமை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவி ஏற்ற அல்போன்ஸ், மத்தி யில் ஆட்சி நடத்தும் பாரதிய ஜனதா கட்சி உணவுக் கட்டுப்பாடு எதனையும் விதிக்கவில்லை என் றார். "குறிப்பாக, பாஜக ஆட்சி நடத் தும் கோவாவில் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் ஆளும் கேரளாவிலும் மாட்டிறைச்சி உண்ண முடியும். எனவே இவ்விவகாரத்தில் பாஜக வுக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை," என்றார் அவர்.