கைவரிசை; 100 பவுன் நகைகள் பறிப்பு தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள சங்கரராமேசுவரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கொள்ளை யர்கள் கைவரிசை காட்டியதில் 13 பெண்கள் தங்களுடைய 100 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகை களை இழந்தனர். குடமுழக்கு விழாவில் பங்கேற் பதற்காக நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இதில் கலந்துகொண்ட ஏராள மானவர்கள் சாமி தரிசனம் செய் தனர். இதற்கு முன்னேற்பாடாக தூத் துக்குடியில் நேற்று உள்ளூர் விடு முறை அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந் தனர். மேலும் கோயிலைச் சுற்றி பல்வேறு இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருந்தன. கும்பாபிஷேக விழாவில் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனா கானா தெருவில் வசிக்கும் சண் முகம்மாள், வயது 60, என்பவரும் தனது மருமகள் ரேணுகாதேவி யுடன் கலந்துகொண்டார்.
அப்போது சண்முகம்மாள் கழுத்திலிருந்த 10 பவுன் நகை களை மர்ம நபர்கள் பறித்து விட் டனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் துறையினரிடம் புகார் கூறினார். இதனால் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரமானது. அப்போது வல்லநாடு, தெய்வ செயல்புரம், நெல்லை நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 13 பெண்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக புகார் அளித் தனர். விசாரணையில் மொத்தம் 13 பெண்கள், 100 பவுன் நகைகள் வரை இழந்தது தெரிய வந்தது இதன் மதிப்பு ரூ.20 லட்சத் துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பெண்கள் கை வரிசையைக் காட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மூன்று பெண் களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

