தடையை மீறி அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது

தடையை மீறி அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது

1 mins read

சென்னை: உயர் நீதிமன்ற கிளை தடை விதித்தபோதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்றும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஏழாவது சம்பள குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்தது. அதிகாரிகள், முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என தலைமைச் செயலர் உத்தரவிட்டார். ஆனால் இரண்டாவது நாளாக தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று பணிக்குத் திரும்பாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.