19 எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க மீண்டும் உத்தரவு

19 எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க மீண்டும் உத்தரவு

1 mins read

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப் பேரவைத் தலைவர் தனபால் மீண்டும் உத்தரவிட்டுள் ளார். இதன் தொடர்பில் டிடிவி தின கரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. அதில் இம்மாதம் 14ஆம் தேதியன்று 19 எம்எல்ஏக்களும் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி கே.பழனி சாமியை நீக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவாளர்கள் கடிதம் கொடுத்ததைத் தொடர்ந்து அவர் களைத் தகுதியின்மை செய்ய அரசு கொறடா ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இதன் அடிப்படையில் அவைத் தலைவர் தனபால், அதிமுகவைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களும் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தர விட்டார். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றி வேல், தங்கத் தமிழ்ச்செல்வன், ஏழுமலை ஆகியோர் சட்டமன்ற செயலரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள தனபால் மறுத்து விட்டார். எம்எல்ஏக்கள் 19 பேரும் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று அவர் மறு உத்தரவு பிறப் பித்தார்.