'நீட்' எதிர்ப்புப் போராட்டம்: உச்ச நீதிமன்றம் தடை

'நீட்' எதிர்ப்புப் போராட்டம்: உச்ச நீதிமன்றம் தடை

2 mins read
26334c3c-4936-4e55-8563-f703c2f12292
-

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூடாது என்று உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா இம்மாதம் 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எட்டாவது நாளான நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுக் கல் லூரிக்கு நேற்று கல்லூரி நிர் வாகம் விடுமுறை அறிவித்தது.

அதேபோல சென்னை அரசு சட்டக் கல்லூரிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் கல் லூரிகளுக்கு வந்துவிட்டு, அங்கே ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புகளைப் பார்த்துவிட்டுத் திரும்பிச் சென் றனர். செங்கல்பட்டு அரசு சட்டக் கல் லூரி முதல்வர் அறையில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள், அறையின் சன்னல் கண்ணாடி களை உடைத்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. மாநிலக் கல்லூரி வளாகத்திலும் மெரினா சாலையிலும் போலிசார் குவிக்கப்பட்டனர்.

கல்லூரிக்கும் கடற்கரைக்கும் செல்ல மாணவர் களுக்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், அனிதாவின் மரணம் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தக் கூடாது என்று தடை விதித்தது. அவ்வாறு போராடுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் சட்டம், ஒழுங்கை சீர்குலைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக வகுப்பு களை மாணவர்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும் கடையடைப்புப் போராட்டத்தையும் நடத்தக்கூடாது என்றும் கூறிய உச்ச நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பில் தமிழக அரசில் தலைமைச் செயலாளரும் முதன்மைச் செயலாளரும் வரும் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்கக நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட் டது.

ஜெயலலிதா நினைவிடம் முன்பு போராட்டம் நடத்த முயன்ற மாணவர்களை போலிசார் தடுத்து நிறுத்தினர். நேற்று எட்டாவது நாளாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடத்தப்பட்டது. படம்: தமிழக ஊடகம்