'பங்களா' எனப் பெயர் மாற்றம் பெறுகிறது மேற்கு வங்க மாநிலம்

'பங்களா' எனப் பெயர் மாற்றம் பெறுகிறது மேற்கு வங்க மாநிலம்

1 mins read

கோல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் பெயர் மாற்றத் திற்கான முதல் தீர்மானம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஆங்கிலத்தில் 'பெங்கால்', பெங்காலியில் 'பங்களா', இந்தியில் 'பங்கால்' என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஆனால் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளும் மத்திய அரசும் எதிர்ப்புத் தெரிவித்தன. மூன்று பெயர்கள் வைப்பதால் குழப்பங்கள் அதிகரிக்கும் என அரசின் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்தின்படி அனைத்து மொழிகளிலும் 'பங்களா' என ஒரே பெயர் மாற்றம் பெறுகிறது மேற்கு வங்கம். இந்தத் தீர்மானத்திற்கு அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.