பெண் அதிகாரிகளைக் கொண்ட இந்திய கப்பல்

பெண் அதிகாரிகளைக் கொண்ட இந்திய கப்பல்

1 mins read
c31c6f53-bf33-4e4c-a158-9a16f50961f3
-

பெண் கப்பற்படை அதிகாரிகளை கொண்ட இந்தியக் கப்பல் 'தாரிணி' உலகைச் சுற்றி வர இன்று புறப்படுகிறது. கோவாவில் இருந்து புறப்படும் இந்தக் கப்பல் தனது உலகச் சுற்றுப் பயணத்தின்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிலாக்லேண்ட்ஸ், கேப் டவுன் ஆகிய நான்கு துறைமுகங்களில் நிற்கும். இக்கப்பலில் சுமார் 21,600 கடல் மைல் தூரம் பயணம் செய்யவுள்ள இந்த ஆறு பெண் களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கோவாவிற்கு வந்து சேருவார்கள். ஆறு பேர் கொண்ட தங்களுடைய குழுவின் இந்தப் பயணம் மற்ற பெண்களுக்கு முன் மாதிரியாக அமையும் என்று கூறினார் கப்பலின் தலைவர் வர்திகா ஜோ‌ஷி. படம்: ஏஎஃப்பி