தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்

தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்

1 mins read
d377e3c6-3dc5-4e7a-bf7f-f70fc876a3b0
-

ஸ்ரீகாளஹஸ்தி: தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலி யுறுத்தும் வகையில் தலைக்கவ சம் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்கப்படும் என்று ஆந்திராவின் ஒரு மாவட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவின் சித்தூர் மாவட் டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துத் தவிர்ப்பு குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சித்தூரில் நடந்த இதனை மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் ராஜசேகரபாபு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பேரணி நடத்தப்படுகிறது. மோட் டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும். "ஏனெனில் சாலை விபத்து களில் மோட்டார் சைக்கிள் விபத் துகளே அதிகம். தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்தின்போது இறப்பது தொடர்கிறது. "எனவே தலைக்கவசம் அணிந்து சென்றால் மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் பெட் ரோல் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த வி ஷயத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்," என்றார்.