விமான ஊழியர்களிடம் அடாவடி; விமானத்தில் செல்ல ஆயுள் தடை

விமான ஊழியர்களிடம் அடாவடி; விமானத்தில் செல்ல ஆயுள் தடை

1 mins read
9f8e6f4d-65a9-4d2f-ad16-d9c73f49a6ad
-

புதுடெல்லி: விமான ஊழியர் களிடம் மோசமாக நடந்து கொள் ளும் பயணிகளுக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை விமானத்தில் செல்லத் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சிவசேனா கட்சி எம்பி ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா விமானப் பயணியை அடித்ததாகப் புகார் எழுந்தது. அதேபோல் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி எம்பி ஒருவரும் விமானத்தைத் தவற விட்ட ஆத்திரத்தில் விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். ஆவணங்களையும் கிழித்தெறிந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் விமானத்தில் செல்ல இவர்கள் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது.

இந்நிலையில், விமான ஊழியர் களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டு வரை விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், "முதல் நிலையில், மோசமான வார்த்தை களால் விமான ஊழியர்களைத் திட்டும் பயணிக்கு 3 மாதம் விமானத்தில் செல்லத் தடை விதிக்கப்படும். "இரண்டாம் நிலையில், ஊழியர் களைத் தாக்கினால் சம்பந்தப்பட்ட பயணிக்கு 6 மாதம் தடை விதிக்கப்படும். "மூன்றாவது நிலையில், ஊழி யர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தால் சம்பந்தப்பட்ட பய ணிக்கு 2 ஆண்டுகள் முதல் காலவரம்பின்றி அதாவது விமானத்தில் செல்ல ஆயுள் தடை விதிக்கப்படும்," என்று கூறினார். படம்: இந்துஸ்தான் டைம்ஸ்