சென்னை: தமிழை உலக அளவில் பரப்பும் வகையில் தமிழ் பிரசார மன்றம் விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டிய ராஜன் தெரிவித்தார். "இந்தி பிரசார சபாவைப்போன்று தமிழ் மொழியை உலக அளவில் பரப்பவும் தமிழ் கற்க விரும்பு வோர் எளிதில் கற்க வசதி செய்து தரவும் தமிழ் பிரசார மன்றம் ஏற்படுத்தும் திட்ட முள்ளது," என்றார் அவர். மேலும், கைபேசி செயலி, இணையம், தொலைக்காட்சி போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளின் மூலம் தமிழ் கற்க வசதி செய்யப்படும் என்றும் தமிழ் பிரசார மன்றத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். உலகம் முழுவதும் உள்ள வம்சாவளியினர் தமிழ் கற்கவும் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார் அமைச்சர்.
'தமிழ் பிரசார மன்றம்' விரைவில்
1 mins read

